Tuesday, April 2, 2013

குடி பிரியர்களின் அராஜகம்

0

காட்டுமன்னார்கோவில்:போலீசாரின் அலட்சியம் காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் குடி பிரியர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன தணிக்கையும் செய்யாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக குடி பிரியர்களின் அராஜகம் தலை தூக்கியுள்ளதால் பல்வேறு இடங் களில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. போலீசார் சரியான முறையில் ரோந்துப் பணிகளில் ஈடுபடாததே இதற்கு காரணம் என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
காட்டுமன்னார்கோவில் நகரப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரவு 10 மணிக்கு மேலும் சரக்கு விற்பனை தொடர்ந்து வருகிறது. இதனை போலீசார் கண்டு கொள்ளாததால் குடிப் பிரியர்கள் எப்படியும் சரக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 மணிக்கு மேல் கடைகளுக்கு வந்து, அங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படும் சரக்குகளை வாங்கி குடிக்கின்றனர்.

போதை தலைக்கேறி சாலை ஓரத்திலேயே தலை சாய்கின்றனர். இதுமட்டுமல்லாமல் பெரியார் நகர், கச்சேரி தெரு மற்றும் நகரப்பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் ஆட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் தெருக்களில் அடிக்கும் லூட்டி சொல்ல முடியாது.
காட்டுமன்னார்கோவில் நகரப்பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து செல்லாததால் போதை ஆசாமிகளின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. வாகன தணிக்கையும் நடக்காததால் போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படுகிறது.

பகல் நேரத்தில் பணியாற்றவே போலீசார் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இரவில் எவ்வாறு ரோந்து செல்வது என போலீ சார் தெரிவிக்கின்றனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே பல்வேறு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என மக்கள் கருதுகின்றனர். 

0 comments:

Post a Comment