Tuesday, April 2, 2013

காட்டுமன்னார்கோவில் முகாம்

0

காட்டுமன்னார்கோவில் முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள், 21 ஆண்டுகளுக்கு பின், தாய் நாடு திரும்புகின்றனர்.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட கடும் மோதலால், அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள், நார்வே, சுவீடன், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இந்தியாவில், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கியுள்ளனர். தற்போது இலங்கையில் அமைதி நிலவி வரும் சூழலில், அங்கு திரும்பிச் செல்ல, தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகள் தயாராகி வருகின்றனர். இதுவரை, 15 ஆயிரம் பேர், தாய்நாடு திரும்பியுள்ளனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள அகதிகள், ஒவ்வொரு குடும்பமாக, இலங்கைக்கு கிளம்பத் தயாராகி வருகின்றனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன், கண்ணன் என்பவர் முதலில் இலங்கைக்குச் சென்றார். அவரைத் தொடர்ந்து, ஐந்து பேர் சென்றனர். தற்போது மேலும் ஒரு குடும்பத்தினர் இலங்கை செல்ல அனுமதி பெற்றுள்ளனர். ஜெயகிருஷ்ணா - விமலா தேவி தம்பதியினர், இன்னும் 10 நாட்களில், இலங்கை செல்கின்றனர்.

ஜெயகிருஷ்ணா கூறியதாவது: சொந்த நாட்டுக்கு, 21 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வது, மகிழ்ச்சியாக உள்ளது. அங்குள்ள என் தங்கை, தாயை இத்தனை ஆண்டுகளுக்கு பின் பார்க்கப் போவதை நினைத்தாலே மனம் குளிர்கிறது; கனக்கிறது. அடைக்கலம் கொடுத்த தமிழ் மண்ணுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்

0 comments:

Post a Comment