விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று அக்கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி 1,025 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்ப மனு கட்டணம் மூலம் ரூ.52 லட்சம் வசூலாகியுள்ளது.
தங்களது தொகுதியில் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து, அவரது சார்பாக 122 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐயா
எழுத்துரு உடைந்து காணப்படுகிறது.
சரிசெய்யவும்
அன்புள்ள
மு.இளங்கோவன்
http://muelangovan.blogspot.com/