Tuesday, March 29, 2011

ரவிக்குமார் அவர்களின் சாதனைகள்

0

குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள்
சட்டமன்றத்தில் ஆற்றிய முதல் உரையிலேயே குடிசை வீடுகள் குறித்த பிரச்சனையை எழுப்பி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குடிசைகள் அதிகம் உள்ள மாநிலம் என்பதையும் அதில் விழுப்புரம், கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்தான் குடிசைகள் அதிகமாக இருக்கின்றன என்பதையும் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டி  தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தியதாலும்; 2007ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூரை வீடுகளை காரை வீடுகளாக மாற்ற வேண்டும் என்று கோரியிருந்த்தாலும், தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு 21 இலட்சம் இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் முயற்சியினால் விளைந்த பயனாகும்.
நலவாரியங்கள்:
v நரிக்குறவர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரவாணிகளுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v நாட்டுப்புறக் கலைஞர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரசு பதிவு பெற்ற பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துத் தந்தது.

v வீட்டுப்பணியாளர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்கச்செய்தது.

தலித் மக்களுக்கான நடவடிக்கைகள்:

v தலித் மக்கள் பெற்ற 85 கோடி ரூபாய்  தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வைத்தது.

v பஞ்சமி நிலங்கள் மீட்புக்கு தனி ஆணையம் அமைக்க வழி வகை செய்தது.

v 10ஆண்டுகளான தொகுப்பு வீடுகளை சரி செய்ய ரூ 15,000 வழங்க வழி வகை செய்தது.

v இந்தியாவிலேயே முதல்முறையாக ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீத அடிப்படையில்  நிதி ஒதுக்கீடு செய்யும் சிறப்புக்கூறுகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் செய்து ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தலித் மக்களின் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வைத்தது.

v உள்ளாட்சித் தேர்தலில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தலித் மக்களுக்கான தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஒரு நகராட்சி உட்பட 1300 க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கு வழி செய்தது.

v தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இப்போது முதல் தலைமுறையாக படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்கிற திட்டம் வருவதற்கு வழி வகுத்தது.

v சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு முறையாக நிதி ஒதுக்க வலியுறுத்தி அதை நிறைவேற்றச் செய்தது. இதனால் ஆண்டுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்

பொது நடவடிக்கைகள்:

v இசுலாமிய மக்கள் அதிக அளவில் ஈடுபட்டிருக்கும் எலும்புத்தூளால் உரம் தயாரிக்கும் தொழிலுக்கு வாட் எனப்படும் சேவை வரியிலிருந்து முழுமுற்றாக வரிவிலக்குப் பெற்றுத் தந்தது.

v ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றச்செய்தது.

v ஈழத்தமிழ் அகதிகளுக்கான பணக்கொடையை இரண்டு மடங்காக உயர்த்தியது.

v நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம் 300 லிட்டர்  மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வழி வகை செய்தது.

v உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Tank Operators) பணியாளர்களுக்கு ஊதியம் 1500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்த வைத்தது.

v அரசு தொழிற் கொள்கையை  உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உருவாக வழி செய்தது.

v மின்னணுக் கழிவு கொள்கையை  உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தி, அதற்கான கொள்கையை உருவாக்க வழி வகை செய்தது.

v புவி வெப்பமயமாதல் ஆபத்தைக் குறைக்கவும், மின்சார பற்றாக்குறையைப் போக்கவும், அரசு அலுவலகங்களில்; குண்டு பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தற்போது அரசு அலுவலகங்களில் CFL குழல் விளக்குகள் பயன்படுத்த வழி செய்தது.

v பயிர் பாதுகாப்பில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களை ஒப்பிட்டுப் பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கச் செய்தது. அதுமட்டுமின்றி அந்த பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் வட்டம் பிளாக் என்பது அடிப்படை அலகாக வைக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி கிராமம் என்பதை ஒரே அலகாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அதையும் இன்று நடைமுறைப்படுத்த வழி செய்தது.

v இளைஞர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ஆண்டு தோறும் 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

v நூலகங்களுக்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரி தற்போது 1,000 படிகள் வாங்குவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளோம்.

v சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் வழிபட உரிமை கோரிய ஆறுமுக சாமி அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுத் தந்தது.

தொகுதி நடவடிக்கைகள்:

v 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதி மக்களின் கோரிக்கையான முட்டம், மணல்மேடு பாலத்தை அமைக்க வேண்டும் என்று வலியறுத்தி, அந்த பாலம் 65 கோடி ரூபாயில் அமைக்க ஏற்பாடு செய்தது. அதுமட்டுமல்லாமல் நாஞ்சலூர், கடவாச்சேரி ஆகிய இடங்களில் தலா 1 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

v தொகுதியில் இருக்கும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சாலை சிதம்பரம், புத்தூர் சாலை ஆகியவற்றை மாநில நெடுஞ்சாலையாக மேம்படுத்தியுள்ளது.

v தொகுதியில் இருக்கும் அனைத்து நடுநிலைப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியது.

v அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு எமது சொந்த செலவிலே 40 மாணவர்களுக்கு கணினி வாங்கித் தரப்பட்டுள்ளது.

v ஏழ்மையான நிலையில் உள்ள 10  மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஐ.டி.ஐ. தொழிற்நுட்ப பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தது.

v தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் தொகுதி மக்களுக்கு நிரந்தரமாக நிவாரணம் ஏற்படுத்த கொள்ளிடம் பகுதியில் 115 கோடி ரூபாய் செலவில் கரையை உயர்த்துவதற்கும், வீராணம் ஏரியை ஆழப்படுத்தித் தூர்வாரச் செய்வதற்கும் பெரிய திட்டங்களை வகுக்கச் செய்து, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

v வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் உள்ளிட்ட ஓடைகளையும் அகலப்படுத்தவும், கரைகளை உயர்த்தி, ஆழப்படுத்துவதற்கும் மிகப்பெரிய திட்டம் வகுக்க நடவடிக்கை எடுத்தது.

v திருக்கோயில்களை இணைத்து ஆன்மீகச் சுற்றுலா என்று மேம்படுத்துவதற்கு கோரிக்கை விடுத்து திருநாரையூர், திருமுட்டம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை மேம்படுத்தியது.

v தொகுதி மேம்பாட்டு நிதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய இடங்களில் தலா 26 லட்சம் ரூபாயில் வெள்ளப் பாதுகாப்பு மையங்களை உருவாக்கி இருக்கிறோம்.

v ரெட்டியூர், நாஞ்சலூர், கடவாச்சேரி உள்ளிட்ட இடங்களில் சமுதாய நலக் கூடங்களை அமைத்தது. குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை உருவாக்கியது.

v நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 லட்ச ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வுக் கூடம் அமைத்தது. 5 லட்ச ரூபாயில் மாணவர்கள் உட்காருவதற்கு பலகைகள், பெஞ்ச், நாற்காலிகள் அமைத்தது.

v குமராட்சி அரசு மருத்துமனையை தரம் உயர்த்த வழிவகை செய்தது.

v மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அரசு ஆதரவோடு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து தமிழகத்தில் அத்தகைய முதல் பள்ளி காட்டுமன்னார்கோயிலில் உருவாகச் செய்தது.

மேற்கண்ட சாதனைகள்  காட்டுமன்னார் கோயில் தொகுதி  மக்கள் எமது கட்சிக்கு அளித்த அங்கீகாரத்தினாலும் ஊக்கத்தினாலும் நிகழ்த்தப்பட்டவை. மீண்டும் தொகுதி மக்கள் வாய்ப்பளித்தால் இன்னும் பல வளர்ச்சிப் பணிகளை தொகுதிக்காகவும் கடலூர் மாவட்டத்துக்காகவும் தமிழக மக்களுக்காகவும் ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
 
 

Wednesday, March 23, 2011

காட்டுமன்னார்கோவில் அ.தி.மு.க.வேட்பாளர் வரலாறு

0

 தொகுதி: காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி

கட்சி : அ.தி.மு.க.

பெயர் : என்.முருகுமாறன் 
 
வயது : 40 

கல்வி : பி.எஸ்சி. விவசாயம், பி.எல். 

சொந்த ஊர் : காட்டுமன்னார்கோவில் 
 
தொழில் : முன்னாள் அரசு ஊழியர் 

சமூகம் : ஆதிதிராவிடர் 

கட்சிப் பொறுப்பு : கடலூர் (மேற்கு) மாவட்ட துணைச் செயலாளர் 

குடும்பம் : 

மனைவி- நளினி,

மகன்கள்- ஜெயமுகில்வண்ணன், ஜெயமணிமாறன்

Saturday, March 12, 2011

காட்டுமன்னார்கோயில் வேட்பாளர் பட்டியல்

1

 விடுதலை  சிறுத்தைகளகட்சியின் காட்டுமன்னார்கோயில்   வேட்பாளரபட்டியலஇன்னுமஓரிரநாளிலவெளியாகுமஎன்றஅக்கட்சியினமாநிலசசெய்திததொடர்பாளரவன்னியரசதெரிவித்துள்ளா‌ர்.

ி.ு.க. அணியிலஇடம்பெற்றுள்விடுதலைசசிறுத்தைகளகட்சி, பேரவைததேர்தலில் 10 தொகுதிகளிலபோட்டியிஉள்ளது. அக்கட்சியினசார்பிலதேர்தலிலபோட்டியிவிரும்பி 1,025 பேரவிருப்மனஅளித்துள்ளனர். விருப்மனகட்டணமமூலமூ.52 லட்சமவசூலாகியுள்ளது.

தங்களததொகுதியிலகட்சியினதலைவராதொல்.திருமாவளவனபோட்டியிவேண்டுமெவிருப்பமதெரிவித்து, அவரதசார்பாக 122 பேரவிருப்மனஅளித்துள்ளனர்.

தொகுதிகளஇறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்களபட்டியலஓரிரநாளிலஅறிவிக்கப்படுமஎன்று வ‌ன்‌னியரசு வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி பார்வை

0


தொகுதி பெயர்

காட்டுமன்னார்கோவில் (தனி) 

தொகுதி எண் :

159 
 
அறிமுகம்

               காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது. 

தனித்தன்மை :

               சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை ஆகிய 3 பேரூராட்சிகளும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. 

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் : 

பேரூராட்சிகள் :

3
ஸ்ரீமுஷ்ணம் - 15 வார்டுகள்
காட்டுமன்னார்கோவில் - 18 வார்டுகள்
லால்பேட்டை - 15 வார்டுகள் 

கிராம ஊராட்சிகள்

112கீரப்பாளையம் ஒன்றியம்: (21) 

               கூடலையாத்தூர், கலியமலை, கந்தகுமாரன், கானூர், காவாலக்குடி, கோதண்டவிளாகம், குமாரக்குடி, மழவராயநல்லூர், நந்தீஸ்வரமங்கலம், நங்குடி, பாளையங்கோட்டை (கீழ்), பாளையங்கோட்டை (மேல்), பேரூர், பூர்த்தகங்குடி, புடையூர், ராமாபுரம், சோழத்தரம், வடக்குப்பாளையம், வலசக்காடு, வட்டத்தூர், முடிகண்டநல்லூர். 


காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் :(55) 

                 ஆச்சாள்புரம், அகரபுத்தூர், ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம், அறந்தாங்கி, ஆயங்குடி, செட்டித்தாங்கல், ஈச்சம்பூண்டி, எசனூர், கள்ளிப்பாடி, கண்டமங்கலம், கண்டியாங்குப்பம், கஞ்சங்கொல்லை, கால்நாட்டாம்புலியூர், கருணாகரநல்லூர், கீழக்கடம்பூர்,கீழபுளியம்பட்டு, கொக்கரசன்பேட்டை, கொள்ளுமேடு, கொழை, கொண்டசமுத்திரம், குணமங்கலம், குணவாசல்,குஞ்சமேடு, குருங்குடி, கே.பூவிழந்தநல்லூர், ம.ஆதனூர், மதகளிர்மாணிக்கம், மா.மங்கலம், மானியம் ஆடூர், ம.உத்தமசோழகன், மேல்ராதாம்பூர், மேலகடம்பூர், மேல்புளியங்குடி, மோவூர், முட்டம், நகரப்பாடி, நத்தமலை, நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், ராயநல்லூர், ரெட்டியூர், சித்தமல்லி, ஷண்டன், சிறுகாட்டூர், ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீபுத்தூர், ஸ்ரீநெடுஞ்சேரி, தொரப்பு, டி.அருள்மொழிதேவன், தேத்தாம்பட்டு, திருச்சின்னபுரம், வானமாதேவி, வீராணநல்லூர், வீரானந்தபுரம். 

குமராட்சி ஒன்றியம் :(36) 

                  ஆட்கொண்டநத்தம், சி.அரசூர், ம.அரசூர், அத்திப்பட்டு, செட்டிக்கட்டளை, எடையார், எள்ளேரி, கருப்பூர், கீழஅதங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திகுடி, ம.கொளக்குடி, குமராட்சி, கூடுவெளிச்சாவடி, மாதர்சூடாமணி, மெய்யாத்தூர், முள்ளங்குடி, நலன்புத்தூர், நந்திமங்கலம், நெடும்பூர், நெய்வாசல், ம.உடையூர், பரிவளாகம், ம.புளியங்குடி, டி.புத்தூர், ருத்திரச்சோலை, சர்வராஜன்பேட்டை, சோழக்கூர், சிறகிழந்தநல்லூர், தெம்மூர், தெற்குமாங்குடி, வடக்குமாங்குடி, திருநாரையூர், வடமூர், வெள்ளூர், வெண்ணையூர். 

வாக்காளர்கள்

ஆண் - 93,009
பெண் - 86,624
மொத்தம் - 1,79,633
 

வாக்குச்சாவடிகள்

மொத்தம் : 216 

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :

கடலூர் உதவி ஆணையர் (கலால்) சி.வி.கேசவமூர்த்தி98424 05631